Tuesday, October 16, 2012

கிறுக்கி - By all means!!


எங்கிருந்தோ வந்துவிடுகிறது 
அடுத்தவர் பார்க்கையில்,
தைரியம்!
நாயை கடக்கும் போது மட்டுமல்ல, பல தருணங்களில்.
                         ---------------------------------

எப்போதுமே ரசித்ததில்லை,
இப்போது ரசிக்கத்தான் தோன்றுகிறது,
உனக்காக உருவானதால்!
என் கண்ணீர். என் கவிதை.
                         ---------------------------------

யாம் அறியாத மொழி எனினும் 
இனிமை தான்.
பேசியது நீ ஆதலால்!
விளையாடிக்கொண்டிருக்கிறது  அடுத்த வீடு குழந்தை.
                         ---------------------------------

வீதியிலிருந்து வந்தாலென்ன விடுதியிலிருந்து வந்தாலென்ன,
உனக்கான மரியாதையுண்டு,
எப்பொழுதும் எல்லோரிடத்தும்!
பணம்.
                         ---------------------------------


They share a similarity. I don't know whether they could be classified under some category(!?) or not.